Home சினிமா ஜெயிலர் 2 படத்தில் வில்லனாகும் முன்னணி நடிகர்.. செம மாஸ் சம்பவம் காத்திருக்கு

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாகும் முன்னணி நடிகர்.. செம மாஸ் சம்பவம் காத்திருக்கு

0

நெல்ஸன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.

மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது.

ஜெயிலர் 2

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக தகவல் வெளிவந்த நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மாதம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஸ்டைலில் நகைச்சுவை கலந்த மாஸ் அறிவிப்பு டீசராக இருந்தது. பலகோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெறித்தனமான வீடியோ இதோ

இந்த அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே, யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து பேச்சும் இணையத்தில் எழுந்துவிட்டது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணா நடிக்கப்போவதாக தகவல் வெளிவந்து.

வில்லனாகும் முன்னணி நடிகர்

இதை தொடர்ந்து, இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் எஸ்.ஜே. சூர்யா, கண்டிப்பாக ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் இப்படத்தில் நடிக்கப்போவதாகவும் பேசப்படுகிறது. ஆனால், இவை யாவும் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version