முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு…! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

இரட்டை சதம்

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு | Sl Vs Afg Live Match Today Odi Pathum Nisanka

இலங்கை அணிசார்பில் தொடக்க ஆட்டக்காரரான பெத்தும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 210ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதலாவது இரட்டை சதம் இதுவாகும்.

இமாலய இலக்கு

 இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆவார்.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு | Sl Vs Afg Live Match Today Odi Pathum Nisanka

இலங்கை அணிசார்பில், அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

 ஆப்கானிஸ்தான் அணி 382 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று இருபதுக்கு20 போட்டிகளும், இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்