Home இலங்கை சமூகம் கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்?

கைவிடப்பட்ட நிலையில் கல்முனை மத்திய பேருந்து நிலையம் : நடவடிக்கை எடுப்பது யார்?

0

கல்முனை (Kalmunai) மத்திய பேருந்து நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற
நிலையில் காணப்படுவதால் பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பேருந்து நிலைய கட்டடம் மழை காலங்களில் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலைய நிலையக் கட்டடமும் மோசமான நிலையில் காணப்படுவதோடு, அப்பிரதேசங்களில் துர்நாற்றம்
வீசுவதாகவும்,பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கல்முனை பேருந்து நிலையநிலையத்திலிருந்து கொழும்பு (Colombo), யாழ்ப்பாணம் (Jaffna) ,புத்தளம் (Puttalam), மன்னார், குருநாகல்,
கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

பேருந்து நிலையத்தின் மேல் கட்டடத்தில் பல்வேறு துர்நடத்தைகளுக்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை கல்முனை தலைமையக காவல்நிலையம் மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்க்கு அருகாமையில் உள்ள இப்பேருந்து நிலையத்தில் இவ்வாறு நிலைமை காணப்படுவது துரதிஸ்ட வசமாகும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பேருந்து நிலையத்தின் கூரைகள் பயணிகள் மீது இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தினை உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version