2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழப் போகிறது. 2025 ஆம் ஆண்டில் மொத்தம் இரண்டு சூரிய கிரகணம் நிகழும் என நாசா நிறுவனம் கணித்துள்ளது.
இதில் முதல் சூரிய கிரகணம் இன்று மார்ச் 29 ஆம் திகதி நிகழவுள்ளது.100 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் அரிய கிரகணம் இதுவாகும்.
இது ஒரு சில இடங்களில் மட்டுமே தென்படும் என குறிப்பிடப்டுகின்றது. சூரியன், பூமி, நிலவு ஆகியவை சுற்றி வரும் போது அதன் இருப்பிடத்திற்கேற்ப சந்திர கிரகணம், சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சூரிய கிரகணம்
இந்நிலையில், சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது, எந்த நேரத்தில் நிகழவுள்ளது, இந்த கிரகணம் எந்தெந்த பகுதிகளில் தென்படும் என்பது தொடர்பான முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரியனின் ஒளி பூமியில் படாதவாறு நிலவின் ஒளி மறைத்துக் கொள்வதுதான் சூரிய கிரகணம் என்று அறியப்படுகின்றது.
இதனால் சூரியனின் கதிர்கள் பூமி மீது சில நிமிடங்களுக்கு படாமல் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.
கிரகணத்தை எங்கு பார்க்கலாம்?
இந்திய நேரத்தின் அடிப்படையில் மதியம் சரியாக 2.20 மணி முதல் மாலை 6.13 மணி வரை நிகழ்கின்றது. குறிப்பாக மாலை 4.17 மணிக்கு அதன் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் 3 மணி நேரம் 53 நிமிடங்கள் வரையில் நீடிக்கும்.
ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது சூரிய கிரகணம் தென்படும்.
அமெரிக்காவில் சூரிய உதயத்தின் போது அதிகாலை நிகழ்கிறது என்பதால் இதன் தாக்கம் பெரியளிவில் தென்படாது. இதனை இந்தியாவில் காண முடியாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உரிய பாதுகாப்பு நடவடிக்கையுடன் மட்டுமே சூரிய கிரகணத்தை அவதானிக்க வேண்டும்.
இந்து சமய சாஸ்திரம்
இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகணத்தின் போது தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இது கிரகணத்தின் எதிர்மறை தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
கிரகண நேரத்தில் கடவுள் வழிபாட்டில் ஈடுப்பட வேண்டும். வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்க வேண்டும்.
இந்த நேரங்களில் கோயில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். கிரகணத்தின் போது எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக் கூடாது. பயணங்கள் செய்யக் கூடாது.
உணவு சமைப்பதோ காய்கறிகளை நறுக்குவதோ, வேலை செய்யவோ உணவு உண்ணவோ கூடாது என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கூர்மையான பொருட்களை பயன்படுத்தவே கூடாது.
கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை செய்வது போன்றவற்றை செய்யவே கூடாது என என இந்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/FPwvnAfmz80https://www.youtube.com/embed/_nNacPauE-c