Home சினிமா சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி.. இப்படியொரு கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே

சென்சேஷனல் இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி.. இப்படியொரு கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே

0

நடிகர் சூரி

திரையுலகில் காமெடியாக மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டு, அதன்பின் மாஸ் ஹீரோவாக மாறுவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதை தனது கடின உழைப்பினால் சாத்தியப்படுத்தியுள்ளார் நடிகர் சூரி.

புரோட்டா சூரி என அழைக்கப்பட்டு வந்த இவர், தற்போது ரசிகர்களால் விடுதலை ஹீரோ சூரி என கொண்டாடப்பட்டு வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை முதல் பாகம் இவருக்கு தமிழ் சினிமாவில் வேறொரு பரிணாமத்தை கொடுத்துள்ளது.

ஹீரோவாக நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அதனை தொடர்ந்து வெளிவந்த கருடன் படமும் சூப்பர்ஹிட்டானது. மேலும் அடுத்ததாக கொட்டுக்காளி, விடுதலை இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் சூரி நடிப்பில் வெளிவரவுள்ளது.

சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி

இந்த நிலையில், விலங்கு வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது எனவும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இப்படம் குறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள பதிவில் “கருடன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் திரு.கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய திரு‌.பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார். என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும், சூரி” என பதிவு செய்துள்ளார். 

Source: https://cineulagam.com/article/soori-to-join-hands-with-sensetional-director-1724064607

NO COMMENTS

Exit mobile version