முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட தகவல்

தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இசை நிகழ்ச்சி

யாழ்.முற்றவெளியில் நேற்று(09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய திரை பிரலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட தகவல் | South Indian Singer Hariharan Musical Show

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது.

எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

இந்நிலையில் புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

எமது மக்களை தொடர்ந்தும் அவலங்களுக்குள் அமுழ்த்தி வைத்திருந்து, அதன்மூலம் அரசியல் இலாமீட்ட முனைகின்ற சுயலாப தரப்புக்கள், எமது பிரதேசங்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்ற கருத்தினை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக செயற்பபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

அவ்வாறானவர்களின் கருத்துக்களை வலுப்படுத்துவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட தகவல் | South Indian Singer Hariharan Musical Show

இந்த சம்பவமானது, இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி செய்வதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார். 

இதுவல்ல யாழ் மக்களின் அடையாளம்: ஹரிஹரன் இசைநிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் வெளியிட்ட அறிக்கை

இதுவல்ல யாழ் மக்களின் அடையாளம்: ஹரிஹரன் இசைநிகழ்ச்சி தொடர்பில் அங்கஜன் வெளியிட்ட அறிக்கை

மத்திய வங்கியில் நடந்த மோசடி : மந்தகதியில் விசாரணை

மத்திய வங்கியில் நடந்த மோசடி : மந்தகதியில் விசாரணை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்