Home முக்கியச் செய்திகள் வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

வெளிநாட்டு பெண்களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

0

ஸ்பா ஒன்றின் உரிமையாளருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து மூன்று இளம் பெண்களை சிகிச்சையாளர்களாக வேலைக்கு அமர்த்தி, அவர்களை பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு இந்த உத்தரவு இன்று (24) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை விடுத்திருந்த கொழும்பு உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் தலா ரூ. 250,000 இழப்பீடாக வழங்கவும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளது.

வழக்குப் பதிவு

சந்தேக நபர் இழப்பீட்டை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்த்துள்ளது.

2011 ஆம் ஆண்டு வலானா குற்றத்தடுப்புப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், சட்டமா அதிபர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version