Home இலங்கை சமூகம் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாண மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

புதிய இணைப்பு

கொழும்பின் சத்தம் வீதி, லோட்டஸ் வீதி, இலங்கை வங்கி மாவத்தை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகனங்கள் மாற்றுவழிகளில் திருப்பி அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஐ.ம.ச கட்சியின் மே தின கூட்ட மேடையாலேயே இந்த வாகன நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

மே தினத்தை முன்னிட்டு கொழும்பில் (colombo) நாளை (01.4.2024) விசேட போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

பலத்த மின்னல் தாக்கம் – அண்ணன், தங்கை பரிதாப உயிரிழப்பு

பொலிஸ் ஊடகப் பிரிவு

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, 19 மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மே தினம் காரணமாக, கொழும்பில் உள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளமை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய மாற்றுப் பாதைகள் குறித்த விரிவான வரைபடங்களை பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.  

மகிந்த ஆட்சியில் நிகழ்ந்த கொடூரம் : இன்று வழங்கப்படவுள்ள தீர்ப்பு

விசேட போக்குவரத்து பாதைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version