Home இலங்கை சமூகம் உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

0

இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள கிறித்தவர்களின் புனித உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் நாட்டின் முக்கிய நகரங்கள், கிறித்தவ தேவாலயங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதற்கு மேலதிகமாக காத்தான்குடி, கெக்குணுகொல்லை,மாவனல்லை, கல்முனை போன்ற பிரதேசங்களில் விசேட புலனாய்வுப் பிரிவினர் களத்தில் இறக்கப்பட்டு, மிக நுணுக்கமான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் புலனாய்வுத் துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், தனி நபர்கள் ஆகியோரை தடுத்து சோதனையிடவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version