பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை சோதனையிடுமாறு காவல்துறையினருக்கு அறித்தல் விடுக்கப்படுள்ளது.
குறித்த உத்தரவை காவல்துறை தலைமையகம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பிறப்பித்துள்ளது.
காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள்
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.
எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/Lfuq56zxxRY
