Home இலங்கை சமூகம் புனித தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

புனித தலதா கண்காட்சியை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

0

புனித தலதா கண்காட்சியை முன்னிட்டு இரண்டு விசேட தொடருந்து சேவைகளை தொடருந்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நாட்களில் தலதா மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கௌதம புத்தரின் புனித தந்தம் கண்காட்சியை பார்வையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

தொடருந்து சேவை

அவர்களின் வசதிக்காக கொழும்பில் இருந்து கண்டிக்கு தினந்தோறும் மாலை 7.55க்கு கண்டி நோக்கி ஒரு தொடருந்தும், கண்டியில் இருந்து மாலை 8.30க்கு கொழும்பு நோக்கி ஒரு புகையிரதமும் விசேட போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதி வரை இந்த விசேட தொடருந்து ​சேவைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version