Home இலங்கை சமூகம் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை : வெளியான தகவல்

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை : வெளியான தகவல்

0

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இன்று (13) மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்று (12) பிற்பகல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க குறைவு காணப்பட்டதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ.சந்ரசிறி தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு, மாக்கும்புர, கடுவெல, கடவத்தை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தங்களது பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இன்றும் போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் ஷெரீன் அத்துகோரள தெரிவித்துள்ளார்.

வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்

தற்போது பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன, ஆனால் முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது தற்போது பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டபட்டுள்ளது.

எனினும், இன்று (13) கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பக்கூடும் என்பதால், அவர்களின் தேவை கருதி போக்குவரத்து சேவைகளை வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version