நஜுவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கை தொழிலாளி ஒருவர் மோசமாக நடத்தப்படுவதைக் காட்டும் வைரலான காணொளிக்கு தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் அளித்த உடனடி பதிலுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பெப்ரவரியில் வெளியான குறித்த காணொளியில், இலங்கை தொழிலாளி ஒருவர் பாரந்தூக்கி ஒன்றில் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுவதைக் காட்டியது, இது பரவலான பொதுமக்களின் சீற்றத்தையும் கண்டனத்தையும் தூண்டியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜனாதிபதி லீ இந்த சம்பவத்தை மனித உரிமை மீறல் என்று கண்டித்து முழு விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி
இதன்படி, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் எகஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநிறுத்த தென் கொரியாவின் விரைவான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட தனிநபருக்கு நீதியை உறுதி செய்வதற்காக சியோலில் உள்ள இலங்கை தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.