Home உலகம் காசாவில் ஒலிக்கும் மரண ஓலம்: ஆழ்ந்த கவலை வெளியிட்ட இலங்கை

காசாவில் ஒலிக்கும் மரண ஓலம்: ஆழ்ந்த கவலை வெளியிட்ட இலங்கை

0

காசாவில்(Gaza) ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

குறித்த விடயம் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் நிலைமையை மோசமாக்கும் எந்தவொரு நடவடிக்கையும் தவிர்க்குமாறு சகல தரப்பிடமும் கோருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவ தாக்குதல்

அத்துடன், விரையில் அங்கு அமைதி நிலைநாட்டப்படுமென இலங்கை நம்புவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை அதிகரித்துள்ளதுடன் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரையில் போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவ அறிக்கை 

அதேநேரம், தெற்கு காசாவில் ஹமாஸின் இராணுவ உளவுத்துறைத் தலைவரை கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே இஸ்ரேலிய இராணுவம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version