முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம் : வருமானமும் குறைகிறது

2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபா பெறுமதியுடைய பொருள் ஒன்றை கொள்வனவு செய்திருந்தால் அந்த பொருளின் விலை தற்போது 202 ரூபாவாக இருக்கும் என சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “நாட்டினுடைய பணவீக்கம் குறைந்திருக்கின்றது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2022 ஆம் ஆண்டு 7.8 வீதத்தால் எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது. வரலாற்றில் ஒரு நாளும் அவ்வாறு எங்களுடைய பொருளாதாரம் சுருங்கியது இல்லை. 

கடந்த வருடம் கூட 3.6 வீதத்தால் பொருளாதாரம் சுருங்கியிருந்தது, ஆனால் இந்த வருடம் பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனக் கூறப்பட்டிருக்கின்ற நிலையில் பணவீக்கத்தை எடுத்துப் பார்த்தால் 2021ஆம் ஆண்டில் நீங்கள் 100 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்திருந்தால் அது தற்போது 202 ரூபா பெறுமதியாக இருக்கும்.

ஆனால் மக்களுடைய வருமானம் அதிகரிக்கவில்லை, கூலித் தொழிலாளர்களை எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய மாதாந்த வருமானம் குறைந்திருக்கின்றது.

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!

இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!

இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  


https://www.youtube.com/embed/Fdz80HoaA8M

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்