Home இலங்கை அரசியல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

0

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில் கண்காட்சி) நேற்று (19) ஆரம்பமானது.

இந்த கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஆணைக்குழு

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில், புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக பொருளாதார ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படும்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்த “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” என்ற புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும் சிலர் நீதிமன்றத்தை நாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனவும் இவ்வாறு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது, தேசிய கொள்கையின் ஊடாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version