முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (06) காலை 10 மணிக்கு மட்டுப்படுத்தப்பட்டதால்
நாளை (07) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினம் தேவையான எரிபொருள் இருப்புக்களை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுகாதாரத் துறை உறுப்பினர்களுக்கான 35,000 கொடுப்பனவு: விடுக்கப்பட்ட கோரிக்கை

சுகாதாரத் துறை உறுப்பினர்களுக்கான 35,000 கொடுப்பனவு: விடுக்கப்பட்ட கோரிக்கை

விடுக்கப்பட்ட கோரிக்கை

எரிபொருள் விற்பனை துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக பணத்தை வைப்பு சிரமம் என்பதால் அவர்கள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Fuel Shortage From Tomorrow Payment Issu

 எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை

ரணில் வீட்டிற்கு தீ வைத்த சந்தேக நபர் பிணையில் விடுதலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்