Home இலங்கை குற்றம் பல கோடி ரூபா பெறுமதியான காரை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பல கோடி ரூபா பெறுமதியான காரை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

சொகுசு காரொன்றை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Mitsubishi Montero ஜீப் வாகனம் ஒன்றே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட காருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கார் இறக்குமதி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார்.

போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து கார் இறக்குமதி செய்யப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியான செயலால் அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரி கிடைக்காமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/sri-lanka-government-officer-corruption-court-1728739390

NO COMMENTS

Exit mobile version