தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய இலங்கையின் பணவீக்கம் கடந்த மே மாதம் 1.6 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையின் பணவீக்கம் 2.7 வீதமாக பதிவாகியிருந்தது.
பணவீக்கம்
இந்த நிலையில், கடந்த மே மாதத்தின் பணவீக்கம் 1.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 3.3 வீதமாக இருந்த உணவு பணவீக்கம் 0.5 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
அத்துடன், கடந்த 2.3 வீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 2.3 வீதத்திலிருந்து, 2.4 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.