Home இலங்கை சமூகம் இலங்கையை உலுக்கிய டிக்வா புயல் : 400ஐ கடந்த பலி எண்ணிக்கை

இலங்கையை உலுக்கிய டிக்வா புயல் : 400ஐ கடந்த பலி எண்ணிக்கை

0

நாட்டில் நிலவிய டிக்வா புயல் தாக்கத்தினால் 25 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் (DMC) இன்று (02) காலை​ 10 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 336 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர்

மேலும் இந்த அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 565 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 20,271 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் நாடளாவிய ரீதியில் 1,441 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

64,483 குடும்பங்களைச் சேர்ந்த 233,015 பேர் குறித்த பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/or-Y34_zsbU

NO COMMENTS

Exit mobile version