Home இலங்கை சமூகம் இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

0

திருகோணமலை (Trincomalee) கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடி கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்படை

சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், இலங்கையின் அழகிய நீர்நிலைகள் ஒரு முதன்மையான இடமாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், கடல் அலைகளுக்கு அடியில் பாரம்பரிய கலாசார சடங்குகளை நிகழ்த்தியும், நாட்டுப்புற விளையாட்டுகளில் ஈடுபட்டும், ஒரு மயக்கும் காட்சியை உருவாக்கியதாக இலங்கை கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version