Home இலங்கை அரசியல் புவிசார் அரசியலில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம்: அவுஸ்திரேலியா எடுத்துரைப்பு

புவிசார் அரசியலில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம்: அவுஸ்திரேலியா எடுத்துரைப்பு

0

புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு முன்னால் சிறிய மற்றும் இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் இந்து சமுத்திரம் மற்றும் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பின் மூலோபாய முக்கியத்துவத்தை வழங்குவதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வல்லரசு நாடுகள்

”குறிப்பாக உலகின் வல்லரசு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களின் முன்னால், பல்வேறு நாடுகளும் அவற்றை எதிர்ப்பதன் மூலம் தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

மேலும், தற்போதைய உலகில் அரசியல் நம்பிக்கைகள் அல்லது சித்தாந்தங்களை மாற்றுவதை விட பொருளாதார காரணிகள் அரசியல் நிகழ்வுகள் மற்றும் முடிவுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கோவிட் – 19 தொற்று, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பாரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தியது என்றும், அந்த நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட தேவையான நிதி நடவடிக்கைகளின் விளைவாக, நாடுகளில் பணவீக்கம் அதிகரித்தது.

இந்த நடவடிக்கைகள் அவசியமானதாக இருந்தாலும், அவை வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கும், உலகெங்கிலும் மோசமான வாழ்க்கைச் செலவுகளுக்கும் வழிவகுத்தன.

பணவீக்க நிலைமை

உலகளவில் நாடுகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக உயரும் பாதுகாப்புச் செலவுகள் எவ்வாறு இந்த பணவீக்க நிலைமையை மேலும் அதிகரித்தன.

இதற்கமைய நீடிக்கப்பட்ட நிதிக் கொள்கைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் உள்ளடங்கிய இந்த புதிய பொருளாதார சூழலை நிர்வகிப்பதில் அரசாங்கங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும்.

பல்வேறு நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் வர்த்தகங்களும் தங்கள் பொருளாதார தீர்மானத்தின்போது, புவிசார் அரசியல் அபாயங்களைப் புரிந்து கொண்டு அவற்றையும் உள்ளடக்க வேண்டும்.” என்றும் மொரிசன் குறிப்பிட்டார்.  

NO COMMENTS

Exit mobile version