Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

0

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளது.

அதன்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

680.8 மில்லியன் அமெரிக்க டொலர்

கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 2025 இன் முதல் 8 மாதங்களுக்குக் கிடைத்த மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Source: https://ibctamil.com/article/sri-lanka-s-workers-remittances-exceed-usd-6-bn-1789276608

NO COMMENTS

Exit mobile version