Home இலங்கை பொருளாதாரம் நாட்டில் அதிகரித்துள்ள சுற்றுலா வருமானம்

நாட்டில் அதிகரித்துள்ள சுற்றுலா வருமானம்

0

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வருமானம்

இந்தநிலையில், 2025 ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வருமானம் 186.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலா வருமானம் 2,533.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 4.9 வீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, ஜனவரி முதல் நவம்பர் வரை நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,972,957 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்கள் 

குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதில், இந்தியாவிலிருந்து 443,622 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 180,59 பேரும், ரஷ்யாவிலிருந்து 144,308 பேரும், ஜேர்மனியிலிருந்து 123,053 பேரும் மற்றும் சீனாவிலிருந்து 115,400 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவம்பர் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 82,270 என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sri-lanka-tourism-sector-revenue-in-dollars-2025-1763271391

NO COMMENTS

Exit mobile version