Home இலங்கை அரசியல் இலங்கை – பிரித்தானிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான முக்கிய தெரிவுகள்

இலங்கை – பிரித்தானிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்திற்கான முக்கிய தெரிவுகள்

0

இலங்கை – பிரித்தானிய (UK) நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நீதி மற்றும்
தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்சன நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சங்கத்தின் செயலாளராக இலங்கை தமிழ்ரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன்
சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

10ஆவது நாடாளுமன்றத்தின் இலங்கை – பிரித்தானிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துக்கான
நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கலந்து கொண்டோர்

இதன்போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் இதில் பிரதம
விருந்தினராகப் பங்கேற்றார். 

இந்த நிகழ்வில் உரையாடிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்,
கிட்டத்தட்ட 50,000 இலங்கை மாணவர்கள் தற்போது இங்கிலாந்தில் படித்து வருவதாக
குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது உரையில், இருதரப்பு உறவுகளை
வலுப்படுத்துவதில், நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் முக்கியத்துவத்தை
வலியுறுத்தினார்.

NO COMMENTS

Exit mobile version