தனியார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்
வாகன இறக்குமதி
தற்போதைய நிலவரப்படி, தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதிப்பது முக்கியமாகவுள்ளது. ஏனைய இறக்குமதிகளுக்கான தடை படிப்படையாக நீக்கப்பட்டதனை போன்று இந்த தடையும் நீக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வாகன இறக்குமதி தடை நீக்கப்படும். அதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் மோடியின் சகா!
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் படிப்படியாக வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |