Home இலங்கை பொருளாதாரம் இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை!

இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டுக்குள் இலங்கை!

0

இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டு என்று அழைக்கும் ஒரு புதிய சகாப்தத்தில் உலகம் நுழையும் வேளையில், ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் ஒரு முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய இணைப்பாக இலங்கை திகழ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியுமான கர்டிஸ் எஸ். சின்னுடன் நடைபெற்ற ஒரு குழு விவாதத்தில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச,
அங்கு நடைபெற்ற உலகளாவிய கிழக்கு பொருளாதார ஒத்துழைப்பு (GEC) உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில்,

”இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் தற்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தசாப்தத்தை நோக்கி மட்டுமல்லாமல், அப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கால் வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான நூற்றாண்டை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வலுவான உறவுகள் 

வலுவான உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் உலகின் முக்கியப் பிராந்தியங்களுக்கு இடையே இலங்கையை ஒரு நம்பகமான பாலமாக மாற்றுவதே தனது தொலைநோக்குப் பார்வை.

புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம்.

அதேவேளையில் அடுத்த தலைமுறையினரை உலகப் பொருளாதாரத்தில் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகிக்கத் தயார்படுத்த வேண்டியதும் முக்கியத்துவமானது.

இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி, அது எதிர்காலத்தை இணைக்க வேண்டும்,” என நாமல் கூறியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/sri-lanka-within-the-indian-ocean-century-1784203000

NO COMMENTS

Exit mobile version