Home இலங்கை பொருளாதாரம் பல சேவைகளை இரத்து செய்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்

பல சேவைகளை இரத்து செய்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்

0

Courtesy: Sivaa Mayuri

விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை ரத்து செய்வது அவசியம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்சினை

அத்துடன், பயணிகள் தங்கள் இறுதி இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருவதாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.

முன்னதாக, அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் விமானம் ஒன்று தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக, ரத்துச்செய்யப்பட்டதான செய்தி எமது செய்தித்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/sri-lankan-airlines-cancels-services-1731176134

NO COMMENTS

Exit mobile version