Home இலங்கை சமூகம் யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத சிறிலங்கா இராணுவம் : யாருக்கும் தெரியாத பரம...

யாழில் 22 வயது ரஜனியை விட்டு வைக்காத சிறிலங்கா இராணுவம் : யாருக்கும் தெரியாத பரம இரகசியம்

0

தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் செய்த படுகொலைகளில் ரஜனி என்ற பெண்ணின் கொலை மிகவும் பெரிதளவில் பேசப்பட்டது.

தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு பயணமாக தயாராக இருந்த ரஜனி வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து முடித்துக்கொண்டு மானிப்பாய் பகுதியிலுள்ள தனது உறவினர்களுக்கு பயணம் பற்றி கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.

ரஜனியை தேடிய அவர் அண்ணன் உட்பட உறவினர்கள் அவரை தேடிய பின்னர் காவல்துறையிடம் முறையிட்டனர்.

காணாமல் போய் இரண்டு கிழமைகள் ஆகிய நிலையில் கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து பாதி திறந்து அரைகுறையாக மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் ரஜனி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்து விட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் தூக்கிச் சென்று ஆறு இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சிதைத்துள்ளார்கள். ஐந்தாவதாகவும், ஆறாவதாகவும் ரஜனியை துன்பப்படுத்திய இராணுவச் சிப்பாய்களே அரச சாட்சியாக மாறினார்கள்..

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

https://www.youtube.com/embed/-hvG172B0fs

NO COMMENTS

Exit mobile version