Home இலங்கை குற்றம் ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

0

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி வரை பல்வேறு பாலியல் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலியல் நடவடிக்கை

சிறுமிகளை சந்தித்தல், பாலியல் தொடர்புகள் மற்றும் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த இலங்கையர் மீதான வழக்கு அண்மையில் கொலரைன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிணை மனுவிற்காக வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரியதை தொடர்ந்து, நீதிபதி வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

லியனகேக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் PSNI பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version