Home இலங்கை சமூகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி !

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த கதி !

0

கொழும்பில் (Colombo) பெண் ஊழியர் ஒருவர் மீது போலாந்தினை (Poland) சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுலாப் பயணிகள் குழு மதுபோதையில் இத்ததாக்குதலை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் நீச்சல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மதுபோதையில் நீச்சல் குளத்தில் இருந்த சுற்றுலா பயணிகளை, ஹோட்டலின் நிர்வாக மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரியும் குறித்த பெண் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், அதனை செவிமடுக்காத குழுவினர், அவரை நீச்சல் குளத்திற்குள் தள்ளியுள்ளனர்.

இவ்வாறு நீச்சல் குளத்திற்குள் தள்ளப்பட்டதால் குறித்த பெண் ஊழியருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதோடு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது.

போலந்து நாட்டவர்கள் 

இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பெண்ணை காயப்படுத்திய போலந்து நாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பாணந்துறை தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version