இஸ்ரேலில் பணிபுரியும் மற்றுமொரு இலங்கையர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
கட்டுமானத் துறையில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
இதயக் கோளாறு காரணமாக ஏற்பட்ட மரணம்
இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
இறந்தவர் குருநாகல், கல்கட்டுயாய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார்.
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவரின் மரணம் கடந்த14 ஆம் திகதியும் பதிவாகியுள்ளது. அவர் சூடான் நாட்டவரால் கொல்லப்பட்டார்.
