Home இலங்கை ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

ஈரானிய தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர்கள்! குவைத் விமான நிலையத்தில் சம்பவம்

0

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஈரானியத் தாக்குதலில், அங்கு பணிபுரிந்து வந்த இலங்கை நாட்டவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காயமடைந்த மூன்று இலங்கையர்களும் ஆண்கள் என்றும், அவர்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் மின்தூக்கி பழுதுபார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும் தெரியவருகிறது.

தாக்குதலில் இவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் பெரிய அளவிலானவை அல்ல என்றும், அவை சிறிய அளவிலான சாதாரண காயங்கள் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி

எனினும், முறையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அவசியமான சிகிச்சைகளுக்காக அவர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இலங்கை ஊழியர்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவர்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, தேவையான தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/sri-lankans-injured-in-iran-attack-kuwait-airport-1780507535

NO COMMENTS

Exit mobile version