Home சினிமா வீட்டில் போதை பார்ட்டி நடத்திய ஸ்ரீகாந்த்.. தலைமறைவான முக்கிய நடிகர்

வீட்டில் போதை பார்ட்டி நடத்திய ஸ்ரீகாந்த்.. தலைமறைவான முக்கிய நடிகர்

0

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். படத்தில் நடித்ததற்கு சம்பளம் 10 லட்சம் ரூபாயை கேட்டபோது பிரசாத் என்பவர் கோகைன் போதைப்பொருளை தனக்கு பலமுறை தந்ததாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்தில் அவரிடம் 250 கிராம் கோகைன் வாங்கி வீட்டில் போதை பார்ட்டியை நடத்தியதாகவும் ஸ்ரீகாந்த் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். அதனால் இதில் இன்னும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் சிக்க வாய்ப்பிருக்கிறது.

கிருஷ்ணா தலைமறைவு

கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்களில் நடித்து இருக்கும் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்ட நிலையில், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார் என தெரிவித்து இருக்கின்றனர்.

கிருஷ்ணாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வழக்கில் மேலும் யாரெல்லாம் சிக்குகிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

NO COMMENTS

Exit mobile version