Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

தமிழர் பகுதியை முகாமிடும் தென்பகுதி வேட்பாளர்கள்: அரியநேந்திரன் குற்றச்சாட்டு

0

தமிழர் பிரதேசங்களில் முகாமிடும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு முகவர்களாகவும் தமிழ் தேசிய கட்சிகளில் இருக்கும் ஒரு சிலர் செயற்படுவதாக தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (13) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நடைபெற போகும் தேர்தலானது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கான தேர்தல் எனவே அதனை குழப்பும் விதமாக யாரும் செயல்பட கூடாது.

இரண்டாவது வாக்கு

ஏனைய வேட்பாளர்களை ஆதரிப்பவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து விட்டு இரண்டாவது வாக்கை வேறு ஒருவருக்கு வழங்கலாம் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இவ்வாறாக முன்வைக்கப்டும் கருத்துக்களை தமிழ் பொதுக்கட்டமைப்பில் உள்ள ஒருவரும் தெரிவிக்கவில்லை.

அத்தோடு, குறித்த தேர்தலானது என்னை முதன்மைப்படுத்திய தேர்தல் இது தமிழ் இனத்தை முதன்மைப்படுத்திய தேர்தல்” என அவர் தெரிவித்துள்ளார்.  

இவ்வாறு இது தொடர்பாக தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி பின்வருமாறு,

https://www.youtube.com/embed/sk_RvyOW6GM

NO COMMENTS

Exit mobile version