Home இலங்கை சமூகம் பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

0

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேற்கு, தென் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

 

காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் பாதிப்பு

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://tamilwin.com/article/srilanka-weather-report-1730511004

NO COMMENTS

Exit mobile version