ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் பொம்மை திரைப்படம் இலங்கை முழுதும் வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், திரைப்படம் வெளிவருவதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளன.
வெள்ளித்திரை
படத்தின் VIP திரையிடல் 14 ஆம் திகதி கொழும்பிலும் (Colombo) மற்றும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் இடம்பெறவுள்ளது.
நமது சினிமாவை நமது கதைகளை வெள்ளித்திரையில் காண்பது என்பது கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
