Home இலங்கை சமூகம் தையிட்டியில் காவல்துறையின் அராஜகம் – சிறீநேசன் எம்பி கடும் கண்டனம்

தையிட்டியில் காவல்துறையின் அராஜகம் – சிறீநேசன் எம்பி கடும் கண்டனம்

0

தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் கன்னியமாக நடந்து கொள்ளும் பொலிஸார் இந்து மதகுருவினை நடாத்திய விதம் கண்டிக்கத்தக்கது எனவும் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காவியுடை தரித்த துறவி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முற்போக்கான சில விடயங்களை பாராட்டிக் கொண்டிருக்கும் போது பிற்போக்கான, மூர்க்கத்தனமான, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்ற விடயங்கள் நடக்கும்போது அதனை நாங்கள் கண்டிக்காமல் இருக்க முடியாது.

இன்று தையிட்டியில் நடைபெற்ற மூர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் கண்டிக்கின்றோம்.

காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் காவல்துறையினர் நடாத்தியுள்ளனர்.

அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அணுகுகின்றனர் என ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version