Home இலங்கை சமூகம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதி வேண்டும் – சிறீதரன் எம்பி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதி வேண்டும் – சிறீதரன் எம்பி

0

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியிலே பாதிக்கப்பட்ட சமூகம்
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள் இணைந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் இன்று (26-07-2025)
முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் நாயகப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக
மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும் சர்வதேச நீதி பொறிமுறையூடாக
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களுக்கும் அனர்த்தங்களுக்கும்
சர்வதேச சமூகம் ஒரு நீதியான பாதையை திறக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த
போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி அகழ்வுகள் 

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் இந்த
செயற்பாடுகளை கையாளுகின்ற சிவில் செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்த
போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

செம்மணியில் இன்றும் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள் 84யை
தாண்டி இருக்கின்றன. அதேபோன்று சம்பூர் மன்னர் திருக்கேதீஸ்வரம் கொக்கு தொடுவாய் என பல்வேறு
இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த புதைகுழிகளில் அனேகமானது தமிழர்களுடையதாகவே உள்ளன இவற்றில் மீட்கப்பட்ட
என்பு தொபுதிகள் இளைஞர்கள் குழந்தைகளுடையது என்பது பெரும்பாலும்
ஊர்விதப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அண்மையிலே கொக்கு தொடுவாயிலே 51 மனித எலும்புக்கூடுகள் துப்பாக்கியால் சுட்டும்
அடித்து முறிக்கப்பட்டும் புதைக்கப்பட்டிருக்கின்றன என மருத்துவ ஆய்வுகளில்
கண்டறியப்பட்டிருக்கின்றது.

அதேபோல செம் மணியில் எடுக்கப்பட்டு இருக்கின்ற என்பு கூடுகள் தொகுதி
தொகுதிகளாக சிறு குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள், சிறுவர்கள் முதல்
வயோதிபர்கள் வரைக்கும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

இவையெல்லாம் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்ற பொழுதும் எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கின்ற அரசு இதை ஒரு
இனப்படுகொலை என்று வெளியில் சொல்ல மறுப்பதும் தமிழர்களைப் பொறுத்தவரை
ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சர்வதேச நீதியாக தமிழ்
மக்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளை வேண்டியுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version