முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம்

எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

யாழ்ப்பாண மரக்கறிகளால் தம்புள்ளை சந்தையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

அரசியல் கூட்டணி

அதிபர்த் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது மற்றும் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் கட்சி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர்த் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் இது குறித்து தீர்மானிக்கப்படுமென சிவஞானம் சிறீதரன் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! சிறீதரன் கூறிய விடயம் | Sritharan Said Next Election Suport  

அத்துடன், அதிபர்த் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அவருக்கு ஆதரவளிக்கவும் கட்சி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிபராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட வேண்டுமென பல அரசியல்வாதிகள் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு ஆதரவளிப்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்