நடிகர் பிரபாஸ் தற்போது ஒரு pan இந்தியா நடிகராக வலம் வருகிறார். பாகுபலி ஹிட் ஆன பிறகு அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்படுகின்றன.
அடுத்து பிரபாஸ் கல்கி 2898 AD என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் சுமார் 800 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பிரபாஸ் ஒரு சோம்பேறி
பிரபாஸ் 44 வயதாகும் நிலையில் இதுவரை ஏன் திருமணம் செய்யவில்லை என பாகுபலி இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியிடம் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் சொன்ன பதில் வைரல் ஆகி இருக்கிறது.
“பிரபாஸ் ஒரு சோம்பேறி. ஒரு பெண்ணை கண்டுபிடித்து, அவரது பெற்றோரிடம் சென்று பேசுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். அதனால் தான் இன்னும் திருமணம் செய்யவிலை என நினைக்கிறேன்” என பிரபாஸ் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/ss-rajamouli-on-why-prabhas-not-marrying-1718189062
