Home இலங்கை சமூகம் நாட்டில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்! வெளியான அறிவிப்பு

நாட்டில் கடுமையாக்கப்படவுள்ள சட்டம்! வெளியான அறிவிப்பு

0

தொடருந்துகளில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த தொடருந்து பாதுகாப்பு அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறைப்பாடுகள் 

வர்த்தகம் என்ற பெயரில் திருட்டுகள் இடம்பெறுவதாக தொடருந்து பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 1902ஆம் ஆண்டு தொடருந்து கட்டளைச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ், தொடருந்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் வியாபாரிகள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இந்த நடவடிக்கை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இலங்கை நடமாடும் தொடருந்து வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

 

NO COMMENTS

Exit mobile version