Home உலகம் ஐரோப்பிய நாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் (Greece) நாட்டின் தீவுகளுக்கு அருகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குறித்த நிலநடுக்கமானது நேற்று (11.6.202) செவ்வாய் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வு மையம்

கிரீஸ் (Greece) நாட்டின் தெசலி, மக்னீசியா, வோலோஸ் ஆகிய தீவுகளுக்கு அருகே கடல் மட்டத்தில் இருந்து 11 கிலோ மீட்டருக்கும் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும், கிரீஸ் நாட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அஜியா அன்னா (pop. 820), 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்டியாயா (pop. 4,300) மற்றும் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்கியாதோஸ் (pop. 5,200) ஆகிய இடங்களில் குறைந்த அளவிளான நடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என தெரிக்கப்பட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/strong-earth-quick-kits-southeast-of-volos-greece-1718152829

NO COMMENTS

Exit mobile version