Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் குளவிக்கூடு கழைந்தமையால் வீதியில் பயணித்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
இதில் வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரும் வீதியால் பயணித்தவர்கள்
ஆறுபேரும் குளவிக்கொட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும்
பாடசாலை மாணவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
