Home இலங்கை சமூகம் மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆய்வு

மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆய்வு

0

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணப் பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வுகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களில் மண்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் உள்ள மண்சரிவு அபாயமுள்ள பாடசாலை வளாகங்களின் நிலை குறித்த விரைவான மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

15 பேர் கொண்ட நிபுணர் குழு

இந்த ஆய்வு நடவடிக்கைகள் டிசம்பர் 9ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தற்போது வரை முன்னெடுக்கப்படுகின்றது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து பேராதனை, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட நிபுணர் குழுவால் வழிநடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version