முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உப தொடருந்து நிலையம் – மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி

Courtesy: Ligarin

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உப தொடருந்து நிலையம் மற்றும் மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் (FHCS) அமைந்துள்ள மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள மருத்துவபீட மாணவர்களுக்கு அமைச்சினால் சுமார் 30 கோடி ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட உள்ளக வீதியொன்றை திறந்து வைத்த வைபத்தில் இவ்வுறுதி வழங்கப்பட்டுள்ளது.  

பல்கலைக்கழக் துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் விடுத்த வேண்டுகோளுக்கமைய குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உப தொடருந்து நிலையம்

இதன்படி, கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் பல்வேறு அனர்த்தங்களையும், வீதி விபத்துக்களையும் சந்திக்கும் நிலையில் அவர்களின் வசதி கருதி திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பல்கலைக்கழகத்தின் இரு பகுதியையும் (East and West) இணைக்கும் மேம்பாலம் ஒன்றை அமைத்து தருமாறும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு வந்தாறுமூலையை அடைவதற்கு தொடருந்து போக்குவரத்தில் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் காரணமாக உப தொடருந்து நிலையத்தின் அவசியம் தொடர்பிலும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கோரிக்கை விடுத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உப தொடருந்து நிலையம் - மேம்பாலத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி | Sub Station At University Of The East

இக்கோரிக்கையினை கவனத்தில் கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தொடருந்து உபநிலையத்தை ஒரு மாதத்தில் உருவாக்குவதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் மேம்பாலம் அமைக்கும் பிரச்சினையை அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கக்கூடியவாறு தாம் நடிவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.