Home சினிமா சுப்ரமணியபுரம் பட புகழ் நடிகர் இலைக்கடை முருகன் மரணம்

சுப்ரமணியபுரம் பட புகழ் நடிகர் இலைக்கடை முருகன் மரணம்

0

சசிக்குமார் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படம் எவ்வளவு வரவேற்பை பெற்றது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது.

அந்த படத்தில் மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் இலைக்கடை முருகன். அவர் மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.

கொம்பன், வேலாயுதம் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

மரணம்..

மதுரையில் இலைக்கடை வைத்து இருப்பதால் அவருக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. சமீபத்தில் உடல்நிலை பாதித்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூன் 4ம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/subramaniapuram-actor-ilaikadai-murugan-death-1749070356

NO COMMENTS

Exit mobile version