முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாய்ந்தமருததில் திடீர் சோதனை :பாவனைக்கு உதவாத உணவுகள் அழிப்பு

மட்டக்களப்பு (Baticaloa) சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் சுகாதார குழுவினர் மூன்றாவது தடவையாகவும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கெட்டுக்கள் போன்றவற்றை பார்வையிட்டுள்ளதோடு உரிமையாளர்கள் மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.  

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில்

யாழில் வாள் வெட்டு: 22 பேர் வைத்தியசாலையில்

எச்சரிக்கை 

இந்நிலையில் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், விநியோகம் செய்யும் உணவு நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும் முற்றுகையும் இடம்பெற்றுள்ளது.

~/sudden-raid-third-time-in-saindamarudu-1712039804

சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகளும், வெயிலில் வைக்கப்பட்ட மற்றும் வடிகான்கள் மீது வைக்கப்பட்ட உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

பாடசாலை மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: கிடைத்தது அனுமதி

மைத்திரிக்கு வாய் கட்டுப்பாடு இல்லை: மனோ எம்.பி விமர்சனம்

மைத்திரிக்கு வாய் கட்டுப்பாடு இல்லை: மனோ எம்.பி விமர்சனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்