முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் நெல் வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் கொள்வனவில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் தராசுளுக்கு அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனையானது, நேற்றைய தினம் (07.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சட்டவிரேத தராசுக்களை பயன்படுத்தி நெல் கொள்வனவு செய்தன் மூலம் மோசடி செய்து வந்த 8 வியாபாரிகளின் தராசுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தராசு மூலம் மோசடி 

மேலும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்களத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பணிப்பாளர் வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நெல் வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை | Sudden Scale Checking For Paddy Buyers

மட்டக்களப்பில் தற்போது வேளாண்மை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து வரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தராசுகள் மூலம் மோசடி செய்து விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்துவருவதாக விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், வயல்பகுதிகளில் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவரும் வியாபாரிகளின் தராசுகளை பரிசோதனை செய்யுமாறு அரசாங்க அதிபர் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

இதனையடுத்து மாவட்ட பணிப்பாளர் வி.விக்னேஸ்வரன் தலைமையில் பரிசோதனை உத்தியோகத்தர்களால் செங்கலடி பிரதேசத்திலுள்ள வயல் பகுதிகளிலுள்ள லொறிகளில் நெல் கொள்வனவு செய்துவரும் வியாபாரிகளை தேடி முற்றுகையிட்டு அவர்களின் தராசுகளை பரிசோதனை செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் நெல் வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை | Sudden Scale Checking For Paddy Buyers  மட்டக்களப்பில் நெல் வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை | Sudden Scale Checking For Paddy Buyers

இதன் போது, அரச அனுமதியற்ற 5 தராசுகளும் அளவையில் மோசடி செய்யப்பட்ட 3 தராசுகளும் உள்ளடங்கலாக 8 தராசுகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த 8 வியாபாரிகளுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முற்றுகையில் கைப்பற்றப்பட்ட தராசுகளை அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற்கு அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி- ருசாத்

நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா

நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

விபத்தில் பாடசாலை மாணவன் பரிதாப மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்