கொழும்பில் பிரபல போதைப்பொருள் விற்பனையாளாரான சுது நோனா என்று அழைக்கப்படும் ரேகா துஷாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலன்னாவ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது
இதேவேளை, 101 கிலோ 833 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 67 வயதான ஒருவர், யாழ்ப்பாணம் பலாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பில் பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
